மகா சிவராத்திரி, பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை படிக்கலாம். வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும். பாவங்களை நீக்கி, சாபங்களை நீக்கி தோஷங்களை நீக்கி, பிரதோச கால நந்தியே என் முன்னோர்கள், என் தாய், தந்தையோ நாங்களோ தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றம் குறைகளையும் நீக்கி அருள் புரி என மனதார வேண்டி இந்த நாமாவளியை சொல்ல வேண்டும்.
மகா சிவராத்திரி அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய 108 போற்றி
1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
3. ஓம் அனுகூலனே போற்றி
4. ஓம் அருந்துணையே போற்றி
5. ஓம் அண்ணலே போற்றி
6. ஓம் அருள்வடிவே போற்றி
7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
15. ஓம் இனியவனே போற்றி
16. ஓம் இணையிலானே போற்றி
17. ஓம் இடப உருவனே போற்றி
18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
23. ஓம் உத்தமனே போற்றி
24. ஓம் உபகாரனே போற்றி
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
27. ஓம் எளியவனே போற்றி
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
29. ஓம் ஐயனே போற்றி
30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
31. ஓம் கனிவுருவே போற்றி
32. ஓம் களிப்புருவே போற்றி
33. ஓம் களங்கமிலானே போற்றி
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
37. ஓம் கம்பீர உருவனே போற்றி
38. ஓம் குணநிதியே போற்றி
39. ஓம் குருபரனே போற்றி
40. ஓம் குறை களைவோனே போற்றி
41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
42. ஓம் கோயில் நாயகனே போற்றி
43. ஓம் சிவபுரத்தனே போற்றி
44. ஓம் சிவதூதனே போற்றி
45. ஓம் சிவனடியானே போற்றி
46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
48. ஓம் சிவஞான போதகனே போற்றி
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
மேலும் படிக்க... மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!
51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
55. ஓம் ஞானியே போற்றி
56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
57. ஓம் தருமவிடையே போற்றி
58. ஓம் தயாபரனே போற்றி
59. ஓம் தளையறுப்பவனே போற்றி
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
61. ஓம் தவசீலனே போற்றி
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
66. ஓம் நந்தியே போற்றி
67. ஓம் நலமளிப்பவனே போற்றி
68. ஓம் நமனை வென்றவனே போற்றி
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
70. ஓம் நாடப்படுபவனே போற்றி
71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
72. ஓம் நாதனே போற்றி
73. ஓம் நிமலனே போற்றி
74. ஓம் நீறணிந்தவனே போற்றி
75. ஓம் நீதி காப்பவனே போற்றி
76. ஓம் பராக்கிரமனே போற்றி
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
80. ஓம் பதமளிப்பவனே போற்றி
81. ஓம் பர்வதமானவனே போற்றி
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
83. ஓம் புண்ணியனே போற்றி
84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
85. ஓம் பெரியவனே போற்றி
86. ஓம் பெருமையனே போற்றி
87. ஓம் மஞ்சனே போற்றி
88. ஓம் மலநாசகனே போற்றி
89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி
Also see... மகா சிவராத்திரி 2023 : விரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
91. ஓம் மால்விடையே போற்றி
92. ஓம் மகாதேவனே போற்றி
93. ஓம் முனியவனே போற்றி
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
95. ஓம் யோகியே போற்றி
96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
97. ஓம் வள்ளலே போற்றி
98. ஓம் வல்லாளா போற்றி
99. ஓம் வித்தகனே போற்றி
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி
101. ஓம் வீர உருவமே போற்றி
102. ஓம் வீரபத்திரனே போற்றி
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Tamil News