முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திங்கள் கிழமைகளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்...

திங்கள் கிழமைகளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்...

சிவன்

சிவன்

Maha Sivaratiri 2022 | ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் அமர்ந்து இந்த சிவ மந்திரத்தை சொல்லி வர பாவங்கள் நீங்கும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள இந்த சிவன் மந்திரத்தை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். இதனால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மந்திரத்தை மஹா சிவராத்திரி அன்று கூறினால் மிகவும் சிறப்பு.

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

' isDesktop="true" id="705215" youtubeid="B9ShPKeI5fU" category="spiritual">

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மேலும் படிக்க... சாபங்களை போக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்!

First published:

Tags: Maha Shivaratri, Sivan