மஹா சிவராத்திரி அன்று மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் பலன்கள்...
மஹா சிவராத்திரி அன்று மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் பலன்கள்...
சிவன்
Maha sivaratiri 2022 | மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்குரிய மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும்.இந்த மந்திரத்தை சிவராத்திரி அன்று 108 முறை சொல்லி வர அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும். தீராத நோய்யும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
”மந்திரத்தின் பொருள் நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, அனைவரையும் பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம். பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக”.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.