முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மஹா சிவராத்திரி 2022 : சிவனுக்கு விரதம் இருக்கும் முறைகளும் வழிபடும் முறைகளும்...

மஹா சிவராத்திரி 2022 : சிவனுக்கு விரதம் இருக்கும் முறைகளும் வழிபடும் முறைகளும்...

சிவன்

சிவன்

Mahasivaratiri 2022| சிவராத்திரி விரதம் இருக்கும் முறை, செய்ய வேண்டிய 4 கால பூஜைகள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், நெய்வேத்தியம், படிக்க வேண்டிய பதிகங்கள், பூஜை செய்ய வேண்டிய நேரம் என அனைத்து தகவல்களை பற்றியும் தேச மங்கையர்க்கரசி இந்த வீடியோ பதிவில் விளக்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிவபெருமனுடைய அற்புதமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரிக்காக ஒரு வருடமாக காத்திருந்து விரதமிருந்து, வேண்டும் வரங்களையெல்லாம் பெறனும் என்று விரும்பும் பக்தர்கள் ஏராளம். இது ஒரு விரதத்திற்கு உரியநாள். இந்த விரத்தை எளிமையாக எப்படி கடைபிடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஆன்மீக வாதியான தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,” இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு விரதத்தை ஆரம்பித்து அடுத்த நாள் காலை 6 மணிக்கு விரத்தை முடிக்க வேண்டும். இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருக்க வேண்டிய சில விரதங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான சிவனுக்குரிய விரதம் இந்த மகா சிவராத்திரி. இந்த அழகான சிவராத்திரிக்கு எப்படி விரதம் இருப்பது என்றால், காலையிலேயே எழுந்து நீராடி விட்டு நெற்றி நிறைய திருநீர் பூசிக்கொண்டு வீட்டின் பூஜை அறையில் உள்ள சிவனுடைய சிலையை அலங்காரம் செய்து வழிபாடு செய்யுங்கள். அல்லது சிவனுடை படம்தான் உள்ளது என்றாலும் அதற்கு பூக்களால் மாலையிட்டு வழிபாடு செய்யுங்கள்.

மேலும் படிக்க... ருத்ர பிரதோஷம் : சிவனின் சிறப்பு பாடல்களின் தொகுப்பு

அதன் பிறகு உபவாசம் இருக்க வேண்டும். அதாவது உடல் நிலை சரியாக இருப்பவர்கள் விரதம் இருக்க முடியும் என்று ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் விரதம் இருத்தல் நல்லது. அப்படி விரதம் இருப்பவர்கள். தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். என்னை எடுத்துக் கொண்டால் நான் தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டு அன்றைய வேலைகளை செய்வேன்” என்கிறார் தேச மங்கையர்கரசி.

அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது. அதுமட்டுமல்லாமல் சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என ஒரே ஒரு முறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் கிடைக்கும்.

மாலை 6 மணிக்கு பூஜை ஆரம்பிக்கலாம். இதில் 4 கால பூஜைகள் நடத்தபடுவது வழக்கம். மிக முக்கியமான பூஜை அம்பாள் நடத்திய 3ஆம் கால பூஜை. இதில் 11:30 மணி முதல் 1: 30 மணி வரை உள்ள நேரம் முப்பது முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்கும் நேரமாகும். அதனால் இந்த நேரத்தில் பூஜையும் அர்ச்சனையும் செய்வது மிக நன்று எனக் கூறினார்.

' isDesktop="true" id="705399" youtubeid="O27tY0XSqm4" category="spiritual">

மேலும் படிக்க... மஹாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் பலன்கள்

மேலும் மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும் என்றார். மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். 4 கால பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும் என்றார்.

2022ஆம் ஆண்டுக்கான நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான மங்களகரமான நேரம் பற்றி விவரித்துள்ளார். 

முதல் கட்ட பூஜை:

மார்ச் 1ஆம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

இரண்டாம் கட்ட பூஜை:

மார்ச் 1ஆம் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

மூன்றாம் கட்ட பூஜை:

மார்ச் 2ஆம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

நான்காம் கட்ட பூஜை:

மார்ச் 2ஆம் காலை 3:39 முதல் 6:45 வரை

இந்த சிவராத்திரி அன்று சிவாலங்களுக்கு அபிஷேக பொருட்களையும் அதற்கு ஆகும் செலவுகளையும் ஏற்று கொள்வதும் சிறப்பு எனக்கூறினார்.

First published:

Tags: Maha Shivaratri