மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இந்த ஆண்டு ஒரே நாள் வருகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி வரும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது நல்லது. அதேநாள் சனிக்கிழமை மகா சிவராத்திரியும் வருகிறது. இந்த இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் அன்று உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு வணங்குவது மிக சிறப்பு.
மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளும் திரயோதசி திதியானது வரும். திரயோதசி என்பதே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய மிக முக்கியமான நாள். திதியில் திரயோதசி, நட்சத்திரத்தில் திருவாதிரை என சிவபெருமானை போற்றி வணங்கக் கூடிய நாட்கள் ஏராளம் உள்ளன.
திரயோதசி நாளில், பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜை விமரிசையாக நடைபெறும். நந்தி தேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
மாசி மாதத்தின் நிறைவுப் பிரதோஷமானது பிப்ரவரி 18 2023 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்தநாளில், சிவாலயம் சென்று சிவனாரை கண் குளிர தரிசனம் செய்தால் பிரச்னைகள் விலகும் என்பது நம்பிக்கை. அதே போல மாசி மாதம் சிவபெருமானுக்கு இன்னொரு விசேஷமான நாள்... மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வரும் என்றாலும் மகா சிவராத்திரி மாசி மாதத்தில்தான் வரும். இந்த அற்புதமான நாளில், விரதம் மேற்கொள்வார்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் கிடைக்க பெருவார்கள் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
மகா சிவராத்திரிப் பெருவிழா நாளன்று, கோவிலில் இரவில் நடை திறந்திருக்கும். அப்போது ஒவ்வொரு கால பூஜையும் விமரிசையாக நடந்தேறும். மகா சிவராத்திரி நாளில், காலை முதலே விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இரவு தரிசனம் முடிந்து, மறுநாள் காலையில் விரதத்தை நிறைவு செய்த பிறகுதான் வீட்டிற்கு செல்வார்காள்.
இப்படி பிரதோஷமும் மகா சிவராத்திரியும் ஒரே நாளில் வருகிறது. இந்த அற்புதமான இந்த இரண்டு வைபவங்களையும் மனமொருமித்து சிவ சிந்தனையில் திளைத்து வணங்கினால் கேட்டதெல்லாம் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Sivan