மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்குரிய சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்று மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்.
மஹாமிருத்யுஞ்சய் மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
மஹாமிருத்யுஞ்சய மந்திர பலன்கள்:
1. மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிப்பதால் சிவ பெருமான் மகிழ்ச்சி அடைவார். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் பயம், நோய், நம் உடல், மன குறைபாடு ஆகியவற்றை நீக்கி நமக்கு மகிழ்ச்சியையும், செழிப்பாக வாழ்வதற்கான வரத்தையும் வழங்கக்கூடியவர்.
2. சமஸ்கிருதத்தில் மஹாமிருத்யுஞ்சயா என்றால் மரணத்தை வென்றவர் என்று பொருள். எனவே சிவபெருமானை இந்த மந்திரத்தால் வழிபடப்படுகின்றனர். ருத்ராட்ச ஜெபமாலை பயன்படுத்தி நாளை மகா சிவராத்திரியில் 108 முறை தவறாமல் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
3. இந்த அற்புதமான மஹாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிப்பதால் அகால மரணம் ஏற்படாது, மரண பயம் நீங்கும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் அவரின் ஆயுளை அதிகரிக்கும்.
Also see... ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்...!
4. சிவபெருமானின் அன்பையும், அருளையும் விரைவில் பெற்றிட முடியும். நம் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும், அதிர்ஷ்டமும் கிடைத்து எந்த ஒரு சுப விஷயத்திற்கும் பஞ்சமிருக்காது.
5. வாழ்க்கையில் எப்போதும் மேன்மை தான் இருக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் அவர் முன்னேறிக்கொண்டே இருப்பார் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
6. மேலும் ஒருவருக்கு இருக்கும் நாட்பட்ட நோயிலிருந்து கூட விடுபட முடியும். குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தைகள் நல்வழியில் செல்வார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Sivan