முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி 2023: சிவனுக்கு நிவேதனமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் செஞ்சுபாருங்கள்...

மகா சிவராத்திரி 2023: சிவனுக்கு நிவேதனமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் செஞ்சுபாருங்கள்...

சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்

சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்

Maha shivratri 2023 Sweet potato recipe | பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மகா சிவராத்திரிக்கு படையலில் கொழுக்கட்டை சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சை பயறு, கொள்ளு என இவை அனைத்தையும் வைத்து நிவேதனம் செய்வார்கள். அதில் சக்கரைவள்ளி  கிழங்கில் பாயசம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.  

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1

முந்திரி பருப்பு - 1டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பால் - 3 கப்

ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்.

2. அதில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை விட்டு வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

3. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும். 5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.

4. பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.

5. பின்னர் பாதாம் பருப்பை அதன் மேல் தூவி விடலாம். இப்போது சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி.

First published:

Tags: Food, Maha Shivaratri