முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி 2023: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி...!

மகா சிவராத்திரி 2023: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி...!

சிவன்

சிவன்

Maha shivratri 2023 | சிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரியில் சிவராத்திரி வழிபாடு செய்ய இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பூண்டி அடிவாரத்தில் உள்ளது பூண்டி  திருக்கோவில். இக்கோவிலில் இருந்து ஏழுமலை தாண்டி சுயம்பு லிங்கமாக இருப்பவர் வெள்ளியங்கிரி ஆண்டவர். சாமி தரிசனம் செய்ய பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை வனத்துறை அனுமதி அளிக்கப்படும். இம்முறை இன்று முதல் சிவராத்திரி வழிபாடு செய்ய‌ அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையர சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இது காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தண்ணீர் வசதி, மருத்துவ முகாம், உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக செய்து வருகின்றனர். மலையற கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மலை அடிவாரத்தில் சோதனை மையம் அமைத்து உள்ளனர்.

மேலும் படிக்க... மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!

பக்தர்கள் தண்ணீர் கொண்டு செல்ல பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் ஒன்றுக்கு வனத்துறை சார்பாக ₹20 டோக்கன் மலையேறி இறங்கி பின்‌ மீண்டும் அந்த டோக்கனை கொடுத்து இருவது ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது.

செய்தியாளர்: தொண்டாமுத்தூர் சுரேஷ்,கோவை 

First published:

Tags: Coimbatore, Maha Shivaratri