ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மகா சிவராத்திரி: சிவனுக்கு படைக்க வேண்டிய இனிப்பு வகைகள்.. செய்முறை இதோ!

மகா சிவராத்திரி: சிவனுக்கு படைக்க வேண்டிய இனிப்பு வகைகள்.. செய்முறை இதோ!

சிவராத்திரி

சிவராத்திரி

maha shivratri 2023 | இந்த ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகா சிவராத்திரி விரதம் இருந்து ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் ஏற்பட்ட பாவங்கள் விலகும். அன்னை பார்வதிக்கு உகந்தது நவராத்திரி. ஒன்பது நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. மாசி மாதம் மகா சிவராத்திரி பண்டிகை சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் என களைகட்டும். இந்த ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியன்று கடைகளில் வாங்கி இனிப்புகளை படைப்பதை விட, நீங்களே வீட்டில் செய்து சிவனுக்கு நிவேதனம் செய்வது நல்லது. அப்படி வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிமையான இனிப்பு வகைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

பாதாம் ஹல்வா

தேவையான பொருட்கள் :

பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)

சர்க்கரை - 1/2 கப்

பால் - 1 கப்

நெய் - 1/2 கப்

குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊற வைத்தது)

பாதம் ஹல்வா

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். பின் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும். பிறகு அதில் அரைத்த பாதாமை சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும்போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும்போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும். அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி ஆற வைத்தால், பாதாம் ஹல்வா ரெடி!.

Also see... மகா சிவராத்திரி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

ட்ரை ஃப்ரூட் ஹல்வா

தேவையான பொருட்கள் :

பேரிச்சம்பழம் – 1 கப்

வெந்நீர் – தேவையான அளவு

பாதாம் – 1/4 கப்

வால்நட் – 1/4 கப்

முந்திரி – 1/4 கப்

பிஸ்தா – 1/4 கப்

உலர் திராட்சை – 1 ஸ்பூன்

முலாம்பழ விதைகள் – 2 ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

சர்க்கரை – 1/2 கப்

தண்ணீர் – 1/2 கப்

ட்ரை ஃப்ரூட் ஹல்வா

செய்முறை :

ஒரு கப்பில் வெந்நீர் எடுத்து அதில் கொட்டை எடுத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/4 கப் தண்ணீர் மற்றும் 1/4 சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி வைக்கவும். பின் அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதில் பாதாம், வால்நட்ஸ், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு வறுத்து வைக்கவும். அதே கடாயில் நெய் சேர்த்து அதில் உலர் திராட்சை, முலாம்பழ விதைகள் சேர்த்து வறுத்து வைக்கவும்.

பின்னர் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை மிக்சியில் மைபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு வறுத்த பருப்புகளையும் மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்த பேரிச்சம்பழம், சர்க்கரை பாகு, அரைத்த பருப்புகளையும் சேர்த்து நன்குகிளற வேண்டும். பின் இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்கு கெட்டி பதம் வரும் வரை கலக்கவும். அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் சுற்றிலும் நெய் தடவி இந்த பேரீச்சம்பழ கலவையை ஊற்றி அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.

Also see... தை அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1/2 கிலோ

பாசிப்பருப்பு - 200 கிராம்

வெல்லம் - 1 கிலோ

பால் - 1/2 லிட்டர்

நெய் - 100 கிராம்

முந்திரி - 100

சுக்கு - சிறிது

ஏலக்காய் - 10

தேங்காய் - 1

சர்க்கரை பொங்கல்

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். முதலில் அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.

Also see... தை அமாவாசை வருது.. பூஜை சாமான்கள் புதுசுபோல பளபளக்கணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.

First published:

Tags: Maha Shivaratri, Sivan, Sweets