முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இன்று சோமாவார பிரதோஷம்... சிவனை வணங்கினால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்குமாம்...

இன்று சோமாவார பிரதோஷம்... சிவனை வணங்கினால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்குமாம்...

சிவன்

சிவன்

Maha Sivaratiri | கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாசி மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமான விரதம் மாசி சோமவார விரதமாகும். கார்த்திகை மாதத்தில்  வரும் திங்கட்கிழமைகள் சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். அதிலும் பிரதோஷமும் திங்கட்கிழமையும் சேர்ந்து வந்தால் மிகவும் சிறப்பு.

விரதம் இருக்கும் முறைகள்

சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் சோமவார பிரதோஷ விரதம் தரும்.

சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சந்திரன் சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை, மாசி மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.

மேலும் படிக்க... மகா சிவராத்திரி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

 மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம்... அன்று சிவனை வணங்கினால் சிறப்பு...

பலன்கள்

ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

மேலும் படிக்க... மஹா சிவராத்திரி, பிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய 108 போற்றி...

திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும். அன்றைய தினம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க... திங்கள் கிழமைகளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்...

இதனை தொடர்து நாளை மகா சிவராத்திரியும் அதனை தொடர்ந்து மாசி அமாவாசையும் வருகிறது. இவை அனைத்தும் அடுத்து அடுத்து வருவது சிறப்பு. அதிலும் அன்றைய தினம் சிவ வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் வந்து சேரும்...

First published:

Tags: Maha Shivaratri, Sivan