முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி 2022 : வெள்ளிங்கிரி மலையேற 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி..

மகா சிவராத்திரி 2022 : வெள்ளிங்கிரி மலையேற 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி..

வெள்ளியங்கிரி ஹில்ஸ்

வெள்ளியங்கிரி ஹில்ஸ்

Velliangiri Hills | எங்கெல்லாம் சிவன் அமர்ந்தானோ அவ்விடத்தை எல்லாம் மக்கள் கைலாயம் என அழைத்தனர். அதனாலேயே, வெள்ளியங்கிரியை மக்கள் தென் கைலாயம் என அழைக்கத் துவங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளியங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க... மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு தெரியுமா?

தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்வதால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Maha Shivaratri