சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அவருக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனை தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு சிவவழிபாடு செய்யும் பொழுதும் வில்வ இலை இல்லாமல் அந்த வழிபாடு முழுமை அடையாது என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. பிரம்மனால் வில்வமரம், லக்ஷ்மியின் வலது திருக்கரத்தில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கூறுவது உண்டு. சிவ வழிபாட்டில் வில்வ இலை இடம் பெற்றால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும்.
சிவ வழிபாட்டுக்கு எப்போதுமே தனித்துவமும் மகத்துவமும் உண்டு ஒவ்வொரு மாதத்திலும் சிவனாரை உரிய மலர்கள் சூட்டி வழிபடுவது நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருளும் என்கிறார்கள் ஜோதிடர்கள்
சித்திரை மாதத்தில் சிவ வழிபாடு செய்யும்போது, பலாசம் எனும் ஒருவகை மலரைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது குடும்பத்தில் ஒற்றுமையையும் நிம்மதியையும் கொடுக்கவல்லது என்பார்கள். வைகாசி மாதத்தில் புன்னையும் ஆனி மாதத்தில் வெள்ளெருக்கும் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். ஆடி மாதத்தில் அரளி சார்த்தி, சிவனை வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஆவணி மாதத்தில் செண்பக மலர்கள் கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.

தும்பை
புரட்டாசி மாதத்தில், கொன்றைப் பூக்களும் ஐப்பசி மாதத்தில் தும்பைப் பூக்களும் கொண்டு சிவலிங்கத் திருமேனியை அர்ச்சித்து வழிபட்டால், தொழில் ஸ்தானமும் உத்தியோக ஸ்தானமும் வலுப்பெறும். கார்த்திகை மாதத்தில் கத்திரிப்பூவும் மார்கழி மாதத்தில் பட்டி எனும் ஒருவகைப் பூவும் கொண்டு சிவபெருமானுக்குச் சூட்டி வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். தை மாதத்தில், சிவபெருமானுக்கு தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிப்பதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது .
மேலும் படிக்க... மேலும் படிக்க... Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...
மேலும் மாசி மாதத்தில், நீலோத்பலம் மலர் கொண்டு சிவனாருக்கு பூஜைகள் செய்வதும் பங்குனி மாதத்தில், மல்லிகை மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் திருமணம் முதலான தடைகளை நீக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடந்தேறும். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் உள்ளன. அந்தப் பூக்களைக் கொண்டு இறைவனை வணங்கி வந்தால், ஞானம் கிடைக்கப் பெறலாம். இல்லத்திலும் உள்ளத்திலும் எப்போதும் நிம்மதி தவழும். பொருளாதாரத் தடைகள் அகலும்.
மேலும் படிக்க...வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம்
அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று, சிவலிங்க தரிசனம் செய்து நமசிவாய மந்திரம் சொல்லி வழிபடுவோம். ருத்ரம் பாராயணம் மேற்கொள்வோம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, மாதந்தோறும் வருகிற திருவாதிரை, மாத சிவராத்திரி, திரயோதசி திதி எனப்படுகிற பிரதோஷம் முதலான நாட்களில், அவசியம் சிவ வழிபாடு மேற்கொள்வது உன்னத பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.