Home /News /spiritual /

மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவைகள் என்னென்ன?

மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவைகள் என்னென்ன?

சிவன்

சிவன்

Maha shivratri 2022 | மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

  மகா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து 4 ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய அற்புதமான திருநாள். இந்த நாளில் நாம் என்னென்ன செயக்கூடாத் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்...

  1. மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

  2. உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

  3. உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

  4. ஆனாலும் அனைவராலும் விரதம் இருக்க முடியாது என்பது நிதர்சனம். குழந்தைகளும், பெரியவர்களும் அவர்கள் உடல் நிலையைப் பொருத்து உணவு எடுத்துக் கொள்வது அவசியம் தான்.

  5. சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,
  ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி….

  மேலும் படிக்க... Maha Shivratri: மஹா சிவராத்திரி குறித்த இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

  6. சிவ வழிபாட்டில் குங்குமம் அதிகம் பயன்படுத்தப்படுத்தக் கூடாது...

  7. சிவனுக்கு துளசி இலைகளை அர்ப்பணிக்கக்கூடாது. அப்படி அர்பணிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. துளசியின் மணாளனான ஜலந்தர் எனும் அரக்கனை சிவபெருமான் வதைத்த காரணத்தால். சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது துளசி சபித்தாக புராணங்கள் கூறுகின்றன...

  8.  சங்கரரை வழிபடும்போது சங்கு ஊதக்கூடாது. தண்ணீரைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது.

  9. உடைந்த அரிசியை சிவபெருமானுக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதுபோல அரிசி நன்கு தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

  10. சிவப்பு மலர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவை என்பது நம்பிக்கை. அதனால்தான் சிவபெருமானுக்கு சிவப்பு மலர்களை அர்ப்பணிக்கக்கூடாது...

  மேலும் படிக்க... மகா சிவராத்திரி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

  செய்யக்கூடியவைகள்...

  1. மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம்.

  2. சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

  3. ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்கள் மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள். பணியில் உள்ளவர்கள் வேலையை  முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தலே போதுமானது.

  4. சிவராத்திரி அன்று மனதில் சொல்லவேண்டிய மந்திரம்
  “சிவாய நம ஓம்
  சிவாய வசி ஓம்
  சிவ சிவ சிவ ஓம் ”

  5. சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
  தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம் ..
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Maha Shivaratri

  அடுத்த செய்தி