முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி 2023: வரும் சிவராத்திரியில் இதுதான் ஸ்பெஷல்.. கண் விழிக்கும் தேதி, விரத முறைகள் இதோ!

மகா சிவராத்திரி 2023: வரும் சிவராத்திரியில் இதுதான் ஸ்பெஷல்.. கண் விழிக்கும் தேதி, விரத முறைகள் இதோ!

சிவன்

சிவன்

Maha Shivratri 2023 | மாசி மாத சதுர்தமி திதியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கிறோம். இந்த நாளில் கடைபிடிக்கப்படும் விரதமே மற்ற அனைத்து விரதங்களையும் விட மிக உன்னதமான விரதமாக கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மாக சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது. அந்த வகையில் 2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ம் தேதி வருகிறது. அன்று சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வருகிறது. இதனால் மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் விரதத்தை துவக்க வேண்டும்? எந்த தேதியில் கண் விழிக்க வேண்டும் என்ற பலவிதமான சந்தேகத்துடன் உள்ளனர். அதனால்  மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எந்த நாளில் கண் விழிக்க வேண்டும்?  என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பிப்ரவரி 18 ம் தேதி காலையில் விரதம் துவங்கிய பிறகு பகல் முழுவதும் தூங்கக் கூடாது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். நான்கு காலங்களிலும் கண் விழிக்க முடியாதவர்கள் மூன்றாவது காலத்தின் போது கண்டிப்பாக கண் விழித்து, சிவனை வழிபட வேண்டும்.

2. மாலை 6 மணி முதல், பிப்ரவரி 19 ம் தேதி காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே இந்த சமயத்தில் சிவ பூஜை செய்து வழிபடலாம்.

3. பிப்ரவரி 19 ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நிறைவு செய்த பிறகு, பாரணை செய்து உணவு சாப்பிட்டு உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.

4. அப்படி பிப்ரவரி 19 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்யும் முன்பு வீட்டில் விளக்கேற்றி, சிவ நாமங்கள் சொல்லி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

5. பிப்ரவரி 19 ம் தேதி பகலில் சைவ உணவாக, வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று பகல் முழுவதும் தூங்கக் கூடாது. மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்றி வழிபட்ட பிறகே, தூங்க வேண்டும்.


First published:

Tags: Maha Shivaratri