Home /News /spiritual /

மகரவிளக்கு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்... தரிசன நேரம் நீட்டிப்பு

மகரவிளக்கு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்... தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை

சபரிமலை

தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மண்டல, மகரவிளக்கு காலத்தை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புதுவருட பிறப்பையொட்டி நேற்று ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். புத்தாண்டு பிறந்துள்ளதால் இன்றும் வரும் நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும் என கருதப்படுகிறது.

    இதை படிங்க: புத்தாண்டு பலன்கள் 2022 : 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் | ஜோதிடர் காழியூர் நாராயணன் கணிப்பு


    இதனால், தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதியன்று நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் வரும் 19ம் தேதி நடை சாத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் படிங்க: திருமணமாகாதவர்களுக்கு உங்களின் ராசிப்படி 2022ம் ஆண்டு எப்படி இருக்கும்?

    Published by:Murugesh M
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Magaravilakku, Sabarimala Ayyappan

    அடுத்த செய்தி