ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

50 லட்சம் பக்தர்கள்.. சபரிமலையில் மகரவிளக்கு நிறைவு... இன்றுடன் நடை அடைப்பு..!

50 லட்சம் பக்தர்கள்.. சபரிமலையில் மகரவிளக்கு நிறைவு... இன்றுடன் நடை அடைப்பு..!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | சபரிமலையில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவு பெற்றது. சுமார் 50 லட்சம் பந்தர்கள் தரிசனம் செய்ததாக தேவசம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது ஜனவரி 14ஆம் தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிர்ந்த மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க  18 ஆம் தேதி வரை  சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  18 ஆம் தேதி உடன்  ஐயப்பனுக்கு நெய் அபிஷேக பூஜையும் நிறைவு பெற்றது.

இந்த சீசன்  கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி  பூஜை நேற்று (19-01-2023) வரை நடைபெற்றது. ஐயப்பனை தரிசனம் செய்ய நேற்று வரை  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் மண்டல  மகரவிளக்கு சீசன் நிறைவு பெற்றது. இன்று காலை 6.30  மணிக்கு நடை சாத்தப்பட்டத்து.

திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு கொண்டு செல்லும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இந்த மண்டல - மகரவிளக்கு சீசனில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதனால் சபரிமலை வரலாற்றில் இவ்வாண்டு அதிக பக்தர்கள் தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.  நடப்பு சீசனில் தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சம் என கூறப்படுகிறது. நேற்று மாலை தீபாராதனைக்கு பிறகு படிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்பட்ட பிறகு இரவு இறுதி நிகழ்வாக மாளிகைப்புறம் கோவில் சந்நிதியில் குரு பூஜை நடைபெற்றது.

Also see... சபரிமலை: ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் காட்சியளிக்கும் ஐயப்பன்..!

அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் அபிஷேகம் முடிந்து 6.30 மணிக்கு சபரிமலை தந்திரி நடை சாத்திய பின்பு  கோவில் சாவியை தேவசம் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து திருவாபரணம் பந்தளம் அரண்மனைக்கு  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple