ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மகர ஜோதி: அம்பலப்புழை, ஆலங்காடு குழு சார்பில் எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி

மகர ஜோதி: அம்பலப்புழை, ஆலங்காடு குழு சார்பில் எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி

எருமேலி பேட்டை துள்ளல்

எருமேலி பேட்டை துள்ளல்

Sabariamalai | சபரிமலையில் நேற்று (11-01-2023 ) மகர ஜோதியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நடைபெற்றது. ஜனவரி 14ஆம் தேதி மகரஜோதி நடைபெறயுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்வது வழக்கம். சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்த போது தேவர்களும், இப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்களும் ஆடிப்பாடி அதனை கொண்டாடி உள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாகவே எருமேலியில் பேட்டை துள்ளல் ஆடுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி தினமும் நடந்தாலும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கிற்கு முன்னதாக நேற்று 11ம் தேதி நடந்த அம்பலப்புழா குழுவினர் மற்றும் ஆலங்காட்டு குழுவினர்களின்  பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இதோடு  பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் நிறைவடைகிறது.

நேற்றைய பேட்டை துள்ளல் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் இரு குழுக்களாக பேட்டை துள்ளி உள்ளனர். முதலில் மதியம் 12:30 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் வட்டமிடும் கருடனை பார்த்த பின்னர் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளல் தொடங்கி பந்தளம் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர்.

அதனை தொடர்ந்து மதியம் 3:00 மணிக்கு வானத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நட்சத்திரத்தை கண்ட பின்னர் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலுக்கு சென்றனர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை சென்றனர்.

எருமேலி என்றால் என்ன?

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் காட்டுவாசிகள் போல வேடமிட்டு சுவாமி திந்தக தோம் ஐயப்பன் திந்தக தோம் என்று கோஷமிட்டு தெய்வீக ஆட்டம் ஆடுவது வழக்கம்.

எருமேலியில் மண்டல சீசன் துவக்கம் முதல் பேட்டை துள்ளல் நடந்தாலும் மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி நாளை காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றயுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் என்று ஆடிப்பாடி மகிழ்வர். முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்வது வழக்கம்.

First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple