Home /News /spiritual /

சித்திரைப் பெருவிழா மூன்றாம் நாள் வீதி உலா...  மக்கள் திரளில் திளைத்த மீனாட்சியும் சொக்கரும்!

சித்திரைப் பெருவிழா மூன்றாம் நாள் வீதி உலா...  மக்கள் திரளில் திளைத்த மீனாட்சியும் சொக்கரும்!

 காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரர்

காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரர்

Madurai Chithirai Festival | மதுரை சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் வீதி உலா நிகழ்வில் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரர் மக்கள் வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.

மதுரை சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் வீதி உலா நிகழ்வில் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரர் மக்கள் வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 16 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக அன்று மாலை கற்பக விருட்சம் வாகனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரும், சிம்மம் வாகனத்தில் மீனாட்சியும் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்தனர். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா சென்ற நிலையில், மாலையில் பூதம் - அன்னம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.

மூன்றாம் நாளான நேற்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும் சுவாமியும் அம்மனும் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர். நான்கு மாசி வீதிகளின் இரு புறமும் திரளான மக்கள் குவிந்திருந்த மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்தின் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.



மேலும் படிக்க... உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான முத்துமலை முருகன் சிலையின் புகைப்படங்கள்...

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்க இயலாமல், இந்த ஆண்டு மீண்டும் பங்கேற்றுள்ள மக்கள் திரளால் எப்போதும் இல்லாத அளவிலான சமூக புத்துணர்வை சித்திரை திருவிழா காட்சிகள் பிரதிபலித்து வருகின்றன. இதே போன்று தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13 ஆம் தேதி திக் விஜயமும், 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி