Home /News /spiritual /

சித்திரைப் பெருவிழா: மதுரையின் அரசியாக இன்று பட்டம் சூடுகிறாள் மீனாட்சி!

சித்திரைப் பெருவிழா: மதுரையின் அரசியாக இன்று பட்டம் சூடுகிறாள் மீனாட்சி!

மதுரையின் அரசியாக இன்று பட்டம் சூடுகிறாள் மீனாட்சி

மதுரையின் அரசியாக இன்று பட்டம் சூடுகிறாள் மீனாட்சி

சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் செய்யும் விழா இன்று இரவு 8:20 மணி முதல் 8:44 மணிக்குள் நடைபெற உள்ளது.

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களின் திருவிழா. சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 வரை கள்ளழகர் கோவில் திருவிழாக்களும் நடைபெறும். இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று இரவு நடைபெற உள்ளது.

இரவு 8:20 மணி முதல் 8:44 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட உள்ளது.
மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு.
அதன்படி, மீனாட்சி அம்மன் ஆட்சிப் போறுப்பேற்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனை இருத்தி வேப்பம் பூ மாலை சூட்டி, ரத்தின ஆபரணங்கள் கொண்ட ராயர் கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் செய்து ரத்தின ஆபரணங்கள் இழைத்த செங்கோல் வழங்கப்படும். அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பிப்பார்.



பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் கிடையாது. மேலும், பாண்டியர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க... திருப்பதி மலைக்கு தரிசன டிக்கெட் இல்லாமல் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

இன்று காலை கீழ சித்திரை வீதி - மேலமாசி வீதி வழியாக வீதியுலா சென்று கட்டுச்செட்டி மண்டபத்தில் தங்கும் சுவாமி, பிற்பகலில் மேலகோபுர வீதி வழியாக கோவிலுக்கு வந்து பட்டாபிஷேகத்தை நிறைவு செய்த பின்னர், வெள்ளி சிம்மாசனத்தில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நான்கு மாசி வீதிகளில் வீதி உலா வருவர்.

மேலும் படிக்க... மதுரை சித்திரைப் பெருவிழா 7ம் நாள் வீதி உலா ரத்து...

இதனை தொடர்ந்து நாளை (ஏப்ரல் 13) அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெறும் திக் விஜயமும், ஏப்ரல் 14 அன்று காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15 அன்று காலை தேரோட்டமும், ஏப்ரல் 16 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி