மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்-16ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நேற்று கொட்டகை மூகூர்த்தமானது பல்வேறு பூஜைகளுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதியுடன் கொட்டகை முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே வரும் 5ஆம் தேதி உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்-14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.