Home /News /spiritual /

சித்திரைப் பெருவிழா - மதுரையின் அரசிக்கு நாளை திருக்கல்யாணம்!

சித்திரைப் பெருவிழா - மதுரையின் அரசிக்கு நாளை திருக்கல்யாணம்!

Meenakshi thirukalyanam | சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் நாளை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

Meenakshi thirukalyanam | சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் நாளை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

Meenakshi thirukalyanam | சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் நாளை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

    பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெறும். இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.

    மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு.
    அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.

    மீனாட்சி பட்டாபிஷேகம் குறித்து பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடுகையில், "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. மேலும், பாண்டியர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார்.



    பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள், தடாதகை பிராட்டியாக மீனாட்சி மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் திக்விஜய லீலை இன்றிரவு நடைபெறுகிறது. வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி சந்திப்பில் உள்ள லாலா ஶ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெறும்.

    இதன் பின்னர், சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு நாளை (ஏப்ரல் 14) காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
    அதிகாலை 4 மணி அளவில் மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர்.



    காலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுவர். அதனை தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    பின்னர், இரவு 7 மணி அளவில் ஏ.சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வருவர்.



    சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 15 அன்றும், உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 காலை நடைபெறவுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி