Home /News /spiritual /

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது..

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது..

மதுரை சித்திரை திருவிழா.. இன்று கொடியேற்றப்பட்டது...

மதுரை சித்திரை திருவிழா.. இன்று கொடியேற்றப்பட்டது...

Madurai chithirai festival started | மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் இன்று துவங்குகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றம் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அழகர் மீண்டும் மலைக்கு திரும்பும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுள்ளது

மேலும் படிக்கவும் ...
சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் செய்யும் நிகழ்வு இன்று காலை 10:30 மணியில் இருந்து 10:54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற்றது. கம்பத்தடி மண்டப கொடி மரம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி சிறப்பு பூஜைகளும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது...

ஏப்ரல் 12ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 13ம் தேதி திக் விஜயம், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,  ஏப்ரல் 15ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம், ஏப்ரல் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவை, ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... மதுரை சித்திரை திருவிழா 2022 : மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் எப்போது ? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, பக்தர்களின் வசதிக்காக சித்திரை வீதிகளில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கோவிலை சுற்றிலும் உள்ள சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



மேலும் படிக்க... மதுரை சித்திரைத் திருவிழா - அறிந்த கதையும், அறியாத உண்மைகளும்!



கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு மக்கள் பங்கேற்பதால் மிகுந்த புத்துணர்வுடன் காணப்படுகிறார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kallazhagar, Madurai

அடுத்த செய்தி