சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வும், நிறைவு விழாவுமான கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி, பச்சை ஆகிய பூக்களை கொண்டு பூப்பல்லக்கில் கள்ளழகர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டகப்படியில் இருந்து புறப்பட்டார். தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் உத்தரவு பெற்ற கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடு இரவிலும் உற்சாக பெருக்கோடு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக எப்ரல் 14 ஆம் தேதி மாலை அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். 15 ஆம் தேதி எதிர்சேவையும், 16 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும், 17 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நிகழ்வும், 18 ஆம் தேதி தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இன்று அதிகாலை புறப்பட்ட கள்ளழகர், இன்று மாலை மூன்று மாவடி அருகே ஏராளமான பக்தர்களின் உணர்ச்சி மிகுந்த வழியனுப்பலை ஏற்று நாளை பிற்பகல் அழகர் கோவிலை சென்றடைய உள்ளார்.
மதுரையிலிருந்து அழகர்கோயில் வரை அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.