Home /News /spiritual /

சித்திரைப் பெருவிழா 7ம் நாள் வீதி உலா ரத்து - மதுரை மக்களுக்கு குளிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒரு சேர தந்த மழை!

சித்திரைப் பெருவிழா 7ம் நாள் வீதி உலா ரத்து - மதுரை மக்களுக்கு குளிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒரு சேர தந்த மழை!

மீனாட்சி-சுந்த்ரேஸ்வரர்

மீனாட்சி-சுந்த்ரேஸ்வரர்

Madurai Chithirai Festival | மதுரையில் பெய்து வரும் கோடை மழை ஒரு புறம் வெயிலின் தாக்கத்தை தணித்து மக்களுக்கு குளிர்ச்சியை அளித்தாலும், வீதியுலாவை ரத்து செய்ததால் மக்கள் சிறு ஏமாற்றம் அடைந்தனர் |

மதுரை சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாள் (ஏப்ரல் 11) வீதி உலா நிகழ்வில் நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி அருள்பாலிக்கவிருந்த நிலையில், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.

ஏழாம் நாளன்று நந்திகேஸ்வரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், யாளி வாகனத்தில் மீனாட்சியும் நான்கு மாசி வீதிகளிலும் திருவீதியுலா புறப்பட தயாராக இருந்த நிலையில்,
மதுரையில் பெய்து வரும் கோடை மழை காரணமாக அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் முன்பு நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர், மாசி வீதிகளில் நடைபெற இருந்த சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தொடரந்து அம்மன் சன்னதி வளாகத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஏழாம் நாள் நிகழ்வுகள் முடிவுற்றது.
இதனால் மாசி வீதிகளில் விழாவிற்காக காத்திருந்த பொதுமக்கள் சிறு ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் படிக்க... இந்த வாரம் கடக ராசியினருக்கு இடம் மாற்றம் நிகழும்

மதுரையில் பெய்து வரும் கோடை மழை ஒரு புறம் வெயிலின் தாக்கத்தை தணித்து மக்களுக்கு குளிர்ச்சியை அளித்தாலும், வீதியுலாவை ரத்து செய்த விதத்தில் சிறு ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி