மதுரை அரசி மீனாட்சி திருக்கல்யாணம் - மெகா விருந்து தயார்!
மதுரை அரசி மீனாட்சி திருக்கல்யாணம் - மெகா விருந்து தயார்!
மீனாட்சி திருக்கல்யாணம் - மெகா விருந்து தயார்
மதுரை அரசியின் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மெகா கல்யாண விருந்து அளிப்பதற்கான சமையல் பணிகள் சேதுபதி மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகின்றன.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்கும் மக்களுக்கு கல்யாண விருந்து அளிக்கும் பணியினை "பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்தர் சபை டிரஸ்ட்" என்ற தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லட்ச கணக்கான மக்களுக்கு உணவு அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு விருந்து அளிக்க சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்று இரவு துவங்கி நாளை மாலை 5 மணி வரைக்கும் வருகின்ற அனைத்து மக்களுக்கும் சுமார் 3500 கிலோ உணவு வழங்கப்பட உள்ளது. கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருந்துக்கு தேவையான 5000 கிலோ காய்கறிகளை சென்ட்ரல் மற்றும் பரவை மார்க்கெட் சார்பில் வழங்கியுள்ளனர். அரசி உள்ளிட்ட பிற பொருட்களையும் பலர் தன்னார்வமாக வழங்கி உள்ளனர்.
இந்த சமையல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களும், 800 கும் மேற்பட்ட சமையல் உதவியாளர்களும் என சுமார் ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்கது...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.