Home /News /spiritual /

Lunar Eclipse 2022: சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்...

Lunar Eclipse 2022: சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்...

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

Lunar Eclipse 2022 | இந்த சந்திர கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் மீது இந்த வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கக்கூடிய சில கதிர்வீச்சுகள் தாக்குவதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது..

மேலும் படிக்கவும் ...
    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2022 இல்  மே மாதம் 16ஆம் தேதி அன்று நிகழும். அது முழு சந்திர கிரகணம். ஜோதிடம்படி 2022 இல் வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்கள் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16, 2022 அன்று நிகழும். இரண்டாவது நவம்பர் 8, 2022 அன்று நடைபெறும். சாஸ்திரப்படி.. நமது நாட்டில் சூரிய, சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியமானவை. கிரகணத்தின் போது பல செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, ​​சூரிய ஒளி பூமியின் மீது படாமல் தடுப்பதால், பூமியில் இருப்பவர்களுக்கு சந்திரன் கண்ணுக்குத் தெரியாது. இது சந்திர கிரகணம் எனப்படும். இது எப்போதும் முழு நிலவில் நடக்கும்.

    1. உடலின் செரிமான அமைப்பை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, கிரகணத்தின் போது சாப்பிடுவது அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

    2. கிரகணம் தொடங்கும் முன் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது. அப்போது தான் உணவு செரிமானம் முடிந்து வயிறு தன் சமநிலையை அடைந்திருக்கும்.

    3. அதே போல கிரகணங்கள் கர்ப்பிணி பெண்களின் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே கர்ப்பிணிகள் கிரகண நாளின் போது சில முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவது நல்லதாக கருதப்படுகிறது.

    4. சந்திர கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும்.

    5. உணவுப்பொருட்களில் துளசி இலையை சேர்ப்பது மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றை செய்யலாம்.

    6. மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ள கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு எடுத்து கொள்ள வேண்டும்.

    7. முக்கியமாக கிரகண நேரத்தின் போது வெளியே செல்லக்கூடாது.

    8. கண்டிப்பாக உடல் உறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது.

    9. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

    10. கிரகணம் முடிந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, குளித்து விட்டு கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி வருவது நல்லது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Lunar eclipse

    அடுத்த செய்தி