Home /News /spiritual /

Lunar Eclipse 2022: சந்திர கிரகணம் தேதி, நேரம் குறித்த முழு தகவல்கள்...

Lunar Eclipse 2022: சந்திர கிரகணம் தேதி, நேரம் குறித்த முழு தகவல்கள்...

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

Lunar Eclipse 2022 | சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்டது. இது நம் நாட்டில் காணப்படவில்லை. அப்படி என்றால் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் உருவாகி 15 நாட்களுக்குப் பிறகு நிகழ்கிறது. இந்த ஆண்டு இரண்டு சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளன. முதல் சந்திர கிரகணம் 2022 இல் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 16ஆம் தேதி அன்று நிகழும். அது முழு சந்திர கிரகணம். ஜோதிடம்படி 2022 இல் வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்கள் ஆகும். இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகளின்படி.. கிரகணத்தின் பலன் சிலருக்கு நன்றாக இருந்தால்.. சிலருக்கு அது மோசமான விளைவை ஏற்படுத்தும். முதல் சந்திர கிரகணம் உலகின் பல நாடுகளில் காணப்படவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் இந்திய மக்களுக்கு குறைவாகவே இருக்கும்.

முதல் சந்திர கிரகணம் எப்போது?

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16, 2022 அன்று நிகழும். இரண்டாவது நவம்பர் 8, 2022 அன்று நடைபெறும். ஜோதிட சாஸ்திரப்படி.. நமது நாட்டில் சூரிய, சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியமானவை. கிரகணத்தின் போது பல செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகண நேரம்:

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16, 2022 திங்கட்கிழமை இந்திய நேரப்படி  இது காலை 07:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். அது முழு சந்திர கிரகணம். எனவே இது நம் நாட்டில் இல்லை. அதனால் அதன் பாதிப்பு நம்மீது இருக்காது. எனவே இந்தியாவில் உள்ள சூத காலத்திற்கு பொருந்தாது. இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும்.. யாராவது பார்க்க விரும்பினால்.. ஆன்லைனில் பார்க்கலாம். பல யூடியூப் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, ​​சூரிய ஒளி பூமியின் மீது படாமல் தடுப்பதால், பூமியில் இருப்பவர்களுக்கு சந்திரன் கண்ணுக்குத் தெரியாது. இது சந்திர கிரகணம் எனப்படும். இது எப்போதும் முழு நிலவில் நடக்கும்.

எங்கு தெரியும்?

2022 இல் தென்மேற்கு ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் முதல் சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.

சந்திர கிரகணத்தின் போது சூதக் காலம்:

சந்திர கிரகணத்தின் சூதக் காலம் கிரகணத்திற்கு 09 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். இருப்பினும், சந்திர கிரகணம் தெரியும் இடத்தில் மட்டுமே சூதக் காலம் செல்லுபடியாகும். சந்திர கிரகணம் தெரியாத நாட்டில் சந்திர கிரகணம் செல்லாது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

1. கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.

2. உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம், சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

3. கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

4. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

5. செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.

6.கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மெற்கொள்ள வேண்டும்.

7. கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Lunar eclipse

அடுத்த செய்தி