சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில்தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பகுதி சந்திரகிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று 12: 48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தெரியும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் இதுவாகதான் இருக்கும். சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். இது 580 ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.
மேலும் இந்த பகுதி நேர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும், அதுவும் சந்திர உதயத்திற்குப் பிறகுதான் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெரிய வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்
கர்ப்பிணிப் பெண்களுக்கான முன்னெச்சரிக்கைகள்
1. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கிரகண வெளிச்சம் நல்லதல்ல. அதனால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
2. இந்த சந்திர கிரகணம் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
3. கிரகணம் முடிந்த பிறகு குளிப்பது அவசியம்.
சந்திர கிரகணத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
1. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம். தொலைநோக்கி, பைனாகுலர் அல்லது கண்ணாடிகள் மூலம் பார்க்கலாம்.
2. சந்திர கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது. மேலும், நிகழ்வுக்குப் பிறகு பழைய உணவு மற்றும் பால் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
3. அப்படி வேறு வழியில்லை என்றால், துளசி இலைகளை உணவு வகைகளில், குறிப்பாக பாலில் வைத்துவிட்டு கிரகணம் முடிந்த பிறகு எடுத்துவிட்டு சாப்பிடலாம்.
4. சந்திர கிரகணத்தின் போது, அதன் பலனைக் குறைக்க, இறைவனின் நாமத்தையும் மந்திரங்களையும் உச்சரிக்கவும்.
5. சந்திர கிரகணத்தின் போது முடி அல்லது நகங்களை வெட்ட வேண்டாம். இது சாதகமற்றதாக கருதப்படுகிறது. மேலும், கத்திகள், முட்கரண்டி அல்லது வேறு எந்த கூர்மையான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
6. சந்திர கிரகணத்திற்குப் பிறகு உணவு மற்றும் ஆடை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்களும் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.