அத்திவரதரை தரிசனம் செய்ய அலைமோதும் கூட்டம்.... உண்டியல் காணிக்கையாக 6.81 கோடி வசூல்

ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது

news18
Updated: August 14, 2019, 7:28 AM IST
அத்திவரதரை தரிசனம் செய்ய அலைமோதும் கூட்டம்.... உண்டியல் காணிக்கையாக 6.81 கோடி வசூல்
ராஜ அலங்காரத்தில் அத்திவரதர்
news18
Updated: August 14, 2019, 7:28 AM IST
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இதுவரை ரூ.6.81 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருவது வழக்கம். அதேபோல 40 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை மறுதினம் (16-ம் தேதி) வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் இதுவரை ரூ. 6 கோடியே 81 லட்ச ரூபாய் ரொக்க பணமும், 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 40 லட்சத்தி 55 ஆயிரத்தி 265 ரூபாய் ரொக்க பணமும், 31 கிராம் தங்கமும், 507 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேளவன் தகவல் அளித்துள்ளார்.

also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...