அவை கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி. ... வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன். பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?
1.மச்ச அவதாரம்- உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம்.
2.கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம்.
3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்.
4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது.
5.வாமண அவதாரம்- குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.
மேலும் படிக்க... தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்....
6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது.
8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
9. கிருஷ்ண அவதாரம்- சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.
10.கல்கி அவதாரம் – எப்போது எந்த நோக்கத்தில் எதனை உணர்த்த இந்த அவதாரம் எடுக்கப்படும் என்பதை நாம் பகவானிடத்திலேயே முழு உள்ளத்துடன் சமர்பிப்போம்.
வட இந்தியர்கள் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.
மேலும் படிக்க... இன்று மகாசங்கடஹர சதுர்த்தி விரதம்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lord Vishnu, Temple