கோவை செல்வபுரம் தில்லைநகரில் உள்ள விநாயகர் கோவிலில் வெண்கலத்தில் செய்யப்பட்ட ஐயப்பன் சிலை உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மண்டல பூஜை நடைபெற்ற பொழுது, அங்கு வந்து இருந்த ஐயப்ப பக்தர்கள் பூஜையினை செல்போன் மூலம் பதிவு செய்தனர். இதில் நெய் அபிஷேகம் நடைபெற்ற பொழுது அய்யப்பன் சிலை கண் திறந்து மூடுவது போல பதிவாகி இருந்தது.
உடனடியாக அந்த வீடியோவை பதிவு செய்தவர் நெகிழ்ச்சி அடைந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காண்பித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாக இருக்க கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappa Temple, Coimbatore