முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?

பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?

பல்லி விழும் பலன்கள்

பல்லி விழும் பலன்கள்

Palli vilum Palan and remedies | பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதை பற்றியும் இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் உள்ளன. அது போல எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய பல்லியில் சில சாஸ்திரங்கள் உள்ளன. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. பல்லி கத்தினால் என்ன? பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் என்ன? அதற்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பல்லி விழும் பலன்கள்

தலை

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

நெற்றி

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

வயிறு

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.

மேலும் படிக்க... திருமணத்தடை நீங்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்...

முதுகு

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண்

கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.

தோள் 

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பிருஷ்டம்: பிருஷ்டம் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.

கபாலம்

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.

மேலும் படிக்க... கிருத்திகை என்றால் என்ன? கார்த்திகை விரதத்தின் பலன்கள்

கணுக்கால்

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.

மூக்கு 

மூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்.

மணிக்கட்டு

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

தொடை

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

நகம்

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

காது

காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.

மார்பு

மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

கழுத்து

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

உதடு

உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

முழங்கால்

பல்லி விழும் பலன்கள் முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பாத விரல்

பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.

கை

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

பாதம்

பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

பரிகாரங்கள்

1. உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள்.

2. குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.

3. இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

First published:

Tags: Lizard