Home /News /spiritual /

லயன்ஸ் கேட் போர்ட்டல் - விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் வானியல் நிகழ்வு.!

லயன்ஸ் கேட் போர்ட்டல் - விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் வானியல் நிகழ்வு.!

Lion's Gate Portal

Lion's Gate Portal

Lion's Gate Portal | வானத்தில் ஒரு கதவு திறக்கப்படுகிறது என்று ஒரு ஜோதிட ரீதியான ஒரு நிகழ்வை குறிக்கிறது. வானிலை சாஸ்திரம் சமீபத்தில் இதைப் பற்றி அதிக ஆய்வு செய்து வரும் நிலையில், ஜோதிடர்களுக்கு இது புதிதல்ல என்று கூறுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜோதிடம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பிரபஞ்சத்தில், விண்வெளியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கிரகணம், அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட பல்வேறு திதிகளும், நிகழ்வுகளும் விண்வெளியில் கிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில்தான் கணிக்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் வேறு சில முக்கியமான நிகழ்வுகளும் சமீப காலத்தில் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் லயன்ஸ் கேட் போர்ட்டல் திறப்பு என்று கூறப்படுகிறது.

வானத்தில் ஒரு கதவு திறக்கப்படுகிறது என்று ஒரு ஜோதிட ரீதியான ஒரு நிகழ்வை குறிக்கிறது. வானிலை சாஸ்திரம் சமீபத்தில் இதைப் பற்றி அதிக ஆய்வு செய்து வரும் நிலையில், ஜோதிடர்களுக்கு இது புதிதல்ல என்று கூறுகிறார்கள். நம்முடைய ஆசைகளை விருப்பங்களை பிரபஞ்சத்திடம் கூறி, அதை நிறைவேறுவதற்கு மிகச் சிறந்த நாள் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த போர்ட்டல் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை திறந்திருக்கும் என்றும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று அதிக சக்திபெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தால் இணைய தளத்தில் லயன் கேட் போர்ட்டல் திறப்பு மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.

லயன்ஸ் கேட் போர்ட்டல் என்றால் என்ன

ஜோதிட ரீதியாக லயன்ஸ் கேட் சிங்கத்தை தனது ராசியின் அடையாளமாகக் கொண்டிருக்கும் சிம்ம ராசியை குறிக்கும். இந்த காஸ்மிக் நிகழ்வு வானத்தில் நட்சத்திரங்கள் அல்லது கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயணிக்கும் பொழுது ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. அதேபோல சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆகும் பொழுது பூமி, ஓரியன் பெல்ட் மற்றும் சிரியஸ் நட்சத்திரம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் காணப்படும்.



ஜோதிட ரீதியாக சிரியஸ் நட்சத்திரம் முழு சுப கிரகமான குருவின் அனைத்து தன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தீவிரமான ஒரு விஷயத்தை பெறுவது என்ற செவ்வாயின் காரகத்துவம்தையும் கொண்டுள்ளது என்பதால் இந்த நட்சத்திரம் பூமியின் ஒரே நேர்கோட்டில் இணையும் பொழுது நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றும் அளவுக்கு மேனிஃபெஸ்ட் செய்யலாம் என்று கூறப்படுகிறது. பண்டைய எகிப்து நாட்டில் சிரியஸ் என்பது விவசாயத்தின் கடவுளாக வணங்கப்பட்டது.

Also Read : ஊசி முனையில் தவம் செய்த ஆதிபராசக்தியின் கதை.!

லயன்ஸ் கேட் போட்டால் திறப்பின் முக்கியத்துவம் என்பது சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையிலேயே காணப்படுகிறது. அதாவது மேற்கத்திய ஜோதிடப்படி ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும். எனவே சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலம் பெற்று, முழு ஆற்றல் பெற்று சஞ்சரிக்கும் பொழுது நம்முடைய எண்ணங்கள், விருப்பங்கள், புதிய யோசனைகள் மற்றும் குறிக்கோள் அனைத்தையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றுள்ளது.

Also Read : நாக தோஷம் உள்ளவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்? அதற்கான வழிபாடுகள் என்ன.?

மேலும், எட்டாம் தேதி என்பது ஆன்மிக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த எண்ணாகும். எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் எட்டு என்பது செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெளியிலிருந்து கிடைக்கும் நல்ல வாய்ப்பு மற்றும் முன்னேற்றங்களைக் குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எல்லை இல்லாத தன்மை என்று இன்ஃபினிட்டியையும் எண் 8 குறிக்கும். இதனால் ஆகஸ்ட் எட்டாம் தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Astrology

அடுத்த செய்தி