• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்!

பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்!

குபேரர்

குபேரர்

எப்பொழுதும் விளக்கு ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பின்னர் விளக்கு ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் வருமான தடை, பணத்தடை அகழும்

 • Share this:
  குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும்.

  குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். அதே போல குரு பகவான் வழிபாடு வியாழன் கிழமையில் செய்ய காரிய தடை அகன்று நல்ல விஷயங்கள் நடைபெறத் துவங்கும்.

  நீங்கள் பணப்பெட்டியை வைத்திருக்கும் திசை குபேரனுக்கு உகந்த முறையில் வாஸ்து படி அமைத்து உள்ளீர்களா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பின்னர் வடக்கு திசையில் எப்பொழுதும் ஒரு சிறிய மண் பானையில் சில்லரை நாணயங்களைப் போட்டு வையுங்கள். வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் பார்க்கும்படி ஏலக்காய்களை வாங்கி ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வையுங்கள். இந்த பவுல் திறந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஏலக்காய் உடைய வாசம் வீடு முழுவதும் பரவும் பொழுது, அங்கு குபேர யோகம் உண்டாகும் என்கிறது சூட்சம சாஸ்திர குறிப்புகள்.

  மேலும் படிக்க...திருப்பதி ஹவுஸ்புல்.. புரட்டாசியில் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!

  பணத்தை எங்கெல்லாம் வைக்கலாம் தெரியுமா?

  1. தானியம் பெருக எப்பொழுதும் உங்கள் வீட்டு அரிசி பானையில் ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டு வையுங்கள்.

  2. அரிசி பெட்டியில் பணம், நாணயம் போன்றவை இருக்கும் பொழுது அங்கு தனமும், தானியமும் தாராளமாக பெருகும் என்பது நம்பிக்கை.

  3. எனவே வெறுமனே வைக்காமல் இது போல நாணயங்களை ஆவது போட்டு வையுங்கள். இதே முறையில் கல் உப்பையும் பீங்கான் ஜாடியில் போட்டு அதனுள் 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு வைக்கலாம்.

  4.அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் விளக்கு ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பின்னர் விளக்கு ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் வருமான தடை, பணத்தடை அகன்று செல்வ செழிப்பு உயரும். நம் பாட்டி காலத்தில் எல்லாம் சமையலறையில் ஆங்காங்கே பணத்தை சேமித்து வைப்பார்கள்.

  5. உண்மையில் பணத்தை சேமிக்க சமையலறை சிறந்த இடமாக ஆன்மீக குறிப்புகள் கூறுகிறது. பணத்தை கிடைக்கும் பொழுது எல்லாம் மசாலா டப்பாவில் போட்டு வைப்பது, உப்பு டப்பாவில் போட்டு வைப்பது அல்லது ஏதாவது ஒரு டப்பாவில் சமயல் அறையில் போட்டு வைப்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும்.

  6. அப்படி போடும் பணம் எவ்வளவு இருக்கிறது? என்பது நமக்கே தெரியக் கூடாது. இப்படி சூட்சமமாக பெண்கள் செய்து வந்தால் நிச்சயம் அவர்களுடைய செல்வச் செழிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயரும்.

  7.பீரோவில் எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன், பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து வையுங்கள். பணமும், பச்சை கற்பூரமும் எங்கு சேர்ந்து இருக்கிறதோ! அந்த இடங்களில் எல்லாம் பணம் தாராளமாக பெருகும்.

  மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வரலாறும் அதன் சிறப்புகளும்...

  குபேர செல்வம்

  ஆத்மார்த்தமாக மனமுருகி குபேரனை வழிபடுபவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், பங்குச்சந்தை, திடீர் தொழில் லாபம், வாரிசு இல்லாத உயில் சொத்து, லாட்டரி போன்றவற்றின்மூலம் கிடைக்கும் செல்வம் குபேர செல்வம். அதாவது, கோட்சார குரு, சனிப்பெயர்ச்சியின்மூலம் கிடைக்கும் திடீர் தனயோகம் அல்லது 2, 5, 9, 11-ஆம் அதிபதிகளின் தசாபுக்திக் காலங்களில் மட்டும் நடமாடும் திடீர் செல்வம்.

  கோட்சார கிரகங்கள் பாதகமாக மாறும்போது அல்லது தசாபுக்தி பாதகமாகும்போது திடீரென வேகமாக வந்த செல்வம், எப்படி வந்ததோ அப்படியே வேகமாகப் போய்விடும். இவர்களுடைய ஜாத கத்தில் குரு, சனி வக்ரமாக இருக்கும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் சாபமாக செயல்படும். திடீர் பணத்தை பகட்டாகப் பயன் படுத்தாமல் தானம், தர்மம் செய்து, பயபக்தியுடன் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், வேகமாக வந்த செல்வம் மூன்று தலைமுறைக்கு நிலைத்திருக்கும்.

  மேலும் படிக்க...இனி திருமணம் செய்ய சுப முகூர்த்தத்தை நீங்களே கணிக்கலாம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: