• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கிருஷ்ணகிரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா!

கிருஷ்ணகிரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா!

 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது

63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீபைரவர் ஆலயத்தில் 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் உள்ள ஸ்ரீ பைரவர் ஆலயத்தில் 12-ம் ஆண்டு காலபைரவாஷ்டமி பெருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவின் மூன்றாவது நாளான நேற்று கோயிலில் வைக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவில் பைரவ நாத சுவாமிகள் பங்கேற்று நாயன்மார்களுக்கு பூஜை செய்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று நாயன்மார்களை வழிபட்டனர்.

    தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், வரும் 17-ம் தேதி பைரவநாதர் திரிபுர பைரவி அம்மை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: