Home /News /spiritual /

கிருஷ்ண ஜெயந்தி எப்போது.? ஆகஸ்ட் 18 ஆ 19ஆ... சரியான தேதி, பூஜைக்கான நேரம்..!

கிருஷ்ண ஜெயந்தி எப்போது.? ஆகஸ்ட் 18 ஆ 19ஆ... சரியான தேதி, பூஜைக்கான நேரம்..!

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

Krishna Janmashtami 2022 | மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணர் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
Krishna Jayanthi 2022 | இந்தியா முழுவதுமே கோலகாலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி ஆகும். கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி என்று இந்தியா முழுவதும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணர் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதி கொண்டாடப்படுமா அல்லது ஆகஸ்ட் 19 ஆம் டேஹ்தியா என்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு காரணம் அஷ்டமி திதி 18 ஆம் தேதியே தொடங்குகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் அவதாரம், முகூர்த்த நேரம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒன்பவதாவது அவதாரமாக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர்

கிருஷ்ணர் அவதாரம் துவாபர யுகத்தில் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவகி மற்றும் வசுதேவரின் எட்டாவது மகனான, கம்சன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்வதற்காகவே கிருஷ்ணர் அவதரித்தார். இந்த தம்பதியருக்கு பிறக்கும் எட்டாவது மகனால் தான் அஸுரக்குலம் அழியும் என்ற கூறப்பட்டது. எனவே கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் பிறந்த பொழுது, அவருக்கு பதிலாக ஒரு பெண் குழந்தை மாற்றப்பட்டு, கிருஷ்ணர் யாதவர் குலத்தில் மதுராவில் யசோதையின் மைந்தனாக வளர்ந்து வந்தார்.

பிருந்தாவனத்தில் மிகவும் சுட்டியான, குரும்பத்தனம் மிகுந்த குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணனுக்கு வெண்ணை மற்றும் தயிர் என்றால் மிகவும் விருப்பம்.



குழந்தை பருவத்தில் பல அரக்கர்களையும், அச்சுறுத்தல்களையும் குழந்தை கிருஷ்ணர் எதிர் கொண்டு தான் வாழ்ந்த இடத்தில் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். வளர்ந்த பிறகு தன்னுடைய சொந்த தாய் மாமனான கம்சனை கிருஷ்ணர் வதம் செய்துள்ளார். அதன் பிறகு மகாபாரதத்தில் கிருஷ்ணரின் பங்கு எவ்வளவு அளப்பரியது என்பது அனைவரும் அறிந்தது தான்.

Also Read : ஆவணி மாத ராசிபலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் - மேஷம் முதல் கன்னி வரை.!

2022 கிருஷ்ண ஜெயந்தி – திதி, நட்சத்திரம் வேறுபாடுகள்

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜென்மாஷ்டமி சார்ந்த முக்கியமான தேதி மற்றும் நேரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.

அஷ்டமி திதி துவங்கும் நேரம் – வியாழக்கிழமை, ஆகஸ்ட் 18 இரவு 9.20 மணி

அஷ்டமி திதி முடியும் நேரம் – வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19 இரவு 10.59 மணி

ரோகிணி நட்சத்திரம் துவங்கும் நேரம் – சனிக்கிழமை, ஆகஸ்ட் 20 காலை 6 மணி

ரோகிணி நட்சத்திரத்தின் முடியும் நேரம் – ஞாயிறு, ஆகஸ்ட் 21 காலை 8 மணி



பொதுவாக பஞ்சாங்கத்தின் அடிப்படையில், தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள், ஆங்கில தேதி அல்லாமல், நட்சத்திரம் வரும் அன்று பிறந்த நாள் கொண்டாடுவார்கள். ஆனால் கோகுலாஷ்டமியைப் பொறுத்தவரை அஷ்டமி திதி தான் முக்கியம். எனவே ஆகஸ்ட் 19ஆம் தேதி தான் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

Also Read : வெள்ளை பிள்ளையார் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா.?

ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 9:20 மணிக்கு தான் அஷ்டமி திதி துவங்குகிறது. எனவே இரவு நேரத்தில் அதற்கு பிறகு ஜென்மாஷ்டமியை கொண்டாட முடியாது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவு 10.59 மணி வரை அஷ்டமி திதி நீடிப்பதால் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம். மேலும், இந்த ஆண்டு கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



கிருஷ்ண ஜெயந்தி 2022 பூஜை முகூர்த்தம் மற்றும் விரதம்

பொதுவாக அஷ்டமி திதி அன்று எந்த விதமான புதிய செயல்கள் அல்லது நல்ல விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது.

ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தான் கிருஷ்ண ஜெயந்திக்கான பூஜை பெரும்பாலும் துவங்கும். குழந்தை கிருஷ்ணர் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து அவருக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் குழந்தை கிருஷ்ணரின் காலடித்தடங்கள் வாயில் முதல் பூஜை செய்யும் இடம் வரை வரையப்படும்.

Also Read : குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...

கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்டவை சமைக்கப்பட்டு அவருக்கு பிரசாதமாக வைத்து பூஜை செய்யப்படும். ஒரு சில வீட்டில், தொட்டிலில் குழந்தை கிருஷ்ணர் பொம்மையை வணங்கி வழிபடுவதும் உண்டு.



சூரியன் மறைந்த பிறகு, மாலை ஆறு மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி வழிபடலாம்.

வட இந்தியாவில் குறிப்பாக கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பிருந்தாவனம் மற்றும் மதுராவில் நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது
Published by:Selvi M
First published:

Tags: Festival, Krishna Jayanthi

அடுத்த செய்தி