முகப்பு /செய்தி /ஆன்மிகம் / கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?

கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Last Updated :

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி 14, ஆகஸ்ட் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க... இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்...

கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும்?

ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார். கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவமான ‘ஓம் நமோ’ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதம்

கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று  கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

தஹிகலா என்றால் என்ன ?

பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணெயையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

விரதம் இருப்பது எப்படி ?

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய்,  பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது நல்லது. அன்று அன்னதானம் செய்தால் மிகவும் நல்லது.

மேலும் படிக்க... ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறையை இந்த திசையில் வையுங்கள்...

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Krishna Jayanthi, Temple