Home /News /spiritual /

இந்தியாவில் சூரியன் பகவானுக்காக கட்டப்பட்ட முதல் கோவில்... கொனார்க் கோவிலின் சுவாரஸ்யங்கள்

இந்தியாவில் சூரியன் பகவானுக்காக கட்டப்பட்ட முதல் கோவில்... கொனார்க் கோவிலின் சுவாரஸ்யங்கள்

கொனார்க் சூரியன் கோவில்

கொனார்க் சூரியன் கோவில்

Konark Suriya Bhagavan | சூரியனுக்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோயில் கொனார்க் சூரிய கோவில்தான். இந்த பதிவில் இந்த சூரிய பகவான் கோவிலின் சிறப்பு பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

    இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ளது கொனார்க் சூரியன் கோவில். இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவ சூரியன் கோவில் இது. இந்த கோவில் கிழக்கு கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது என்று ரவீந்திரநாத் தாகூர் வியந்து கூறியிருக்கிறார். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்தான் . இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது.

    கொனார்க் சூரியன் கோவில் வரலாறு

    கிழக்கு கங்கை வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவனால் கட்டப்பட்ட இக்கோயில் மொத்தமுமே ஒரு அறிவியல் பெட்டகமாகும். இந்த கோவில் சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கிறது. இக்கோயில் ஒரு கால கடிகாரம் போல செயல்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது.

    கோவிலின் அமைப்பு

    ஒரு தேர் வடிவில் இருக்கும் இந்த கோயிலின் கருவறையை சுற்றிலும் கல்லில் வடிக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் இருக்கின்றன.
    இந்த 24 தேர் சக்கரங்களும் ஒரு நாளின் இருபத்திநான்கு மணிநேரத்தை குறிக்கிறது. 10அடி விட்டம் உடைய இந்த தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் ஏழு சக்கரக் கட்டைகள் இருக்கின்றன. இந்த கட்டைகள் வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கின்றன.

    கால ஓட்டத்தில் சூரிய கோயிலின் பெரும்பகுதி பல்வேறு காரணங்களினால் அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
    இப்போதிருக்கும் கோயில் கருவறையை ஒட்டியே 229அடி உயரமான விமான கோபுரம் இருந்ததாம். இப்பகுதியில் இருக்கும் வலுவில்லாத மண் தன்மையின் காரணமாக 1837ஆம் ஆண்டு அது இடிந்து விழுந்துவிட்டதாம். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளின் போது சூரிய ஒளி நேரடியாக கருவறையின் மேல் விழும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.

    அதோடு இக்கோயிலின் முன்பாக இருக்கும் ஏழு குதிரைகளின் சிற்பங்களையும் நாம் காணலாம். இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன் பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன.



    Also see... இன்று ரத சப்தமி ... சூர்ய பகவான் வழிபாடு சிறந்தது...

    பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டி தேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன. நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.

    Also see... நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக அருள்பாலிக்கும் ஒரே கோவில் இதுதான்...

    கொனார்க் சூரிய கோயிலில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இருக்கின்றன. காமம் ததும்ப வடிக்கப்பட்டிருக்கும் இச்சிற்பங்கள் காலப்போக்கில் சற்றே சிதைந்து போயிருக்கின்றன. கோனார்க் சூரிய கோயிலுக்கு அருகிலேயே பாழைடைந்த நிலையில் இரண்டு கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

    அதிலொரு கோயில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடைது என்றும், மற்றொரு கோயிலில் பலராமர், வராஹா பகவான் மற்றும் திருவிக்ரமர் ஆகியோரது விஹாரங்கள் இருக்கும் வைணவ கோயிலென்றும் கண்டறியப்பட்டுள்ளது. கலிங்க கட்டிடக்கலையின் உச்சமாக திகழ்கிறது கோனார்க் சூரிய கோயில். இக்கோயிலில் உள்ள சுவர்களில் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Odisha

    அடுத்த செய்தி