குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 1101 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடை பெறுவதையொட்டி தூக்ககாரர்களுக்கான நமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு குழந்தை வரம் கேட்கும் தம்பதிகளுக்கு குழந்தை கொடுப்பதாக நம்பப்படும் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் மீன பரணி தூக்க திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தூக்க வழிபாடு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு 1101 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை முன்கூட்டியே முன்பதிவு செய்து அதன் படி நடைபெற உள்ளன. ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கோயிலில் குழந்தை வரம் வேண்டி தூக்க நேர்ச்சையிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
அப்படி நேர்ச்சை மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்தவர்கள் விரதமிருந்து இரண்டு வில்லால் இணைக்கப்பட்ட தேரில் அறுபதடி உயரத்தில் குழந்தைகளை தூக்கி சென்று கோயிலை வலம் வரும் இந்த வினோத திருவிழாவில் குழந்தைகளை தூக்கி செல்லும் தூக்க காரர்களுக்கு பல்வேறு யோகா உட்பட உடல் பயிற்சி மற்றும் ஆன்மீக பயிற்சிகள் வழங்கபடுகிறது.
அந்த பயிற்சிகளில் முக்கியமான நமஸ்காரம் இன்று நடைபெற்றது. இதில் தூக்ககாரர்கள் கோயிலை சுற்றி வந்து நமஸ்காரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் கேரளாவை சேர்ந்த குழந்தை நேர்ச்சைகாரர்கள் மற்றும் தமிழக கேரள பக்தர்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.