ஆடிப்பூரத்தில் பெண்களுக்கு வளையல் வாங்கித் தர வேண்டுமா..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

ஆடிப்பூரம் அன்று அம்பிகை தேவியை வழிபட்டு கோவில்களில் அம்மனுக்கு வளையல் சார்த்துவது வழக்கம்.

ஆடிப்பூரத்தில் பெண்களுக்கு வளையல் வாங்கித் தர வேண்டுமா..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
ஆடிப்பூரம்
  • Share this:
முக்கியமாக ஆண்டாளுக்கு இந்த நாளில்தான் வளைகாப்பு நடத்தி வளையல் அணிவிப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். அதேசமயம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பாளை மனம் உருக வேண்டி வளையல் சார்த்தினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

கன்னிப் பெண்கள் தவறாமல் இந்த ஆடிப்பூரத்தை ஒருங்கினைந்த மனதுடன் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த வாழ்க்கை கிடைக்கும். திருமண வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும்.


ஆடிப்பூரம் வந்ததற்குப் பின்னால் இருக்கும் கதையைப் பற்றித் தெரியுமா..? வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

இந்த நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், நெல்லையப்பர் அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், வளையல் சார்த்துதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வீட்டில் இருந்தபடியே அம்மன் படத்தை வைத்து பூஜை செய்யுங்கள். பின் கன்னிப் பெண்கள், சுமங்கலிகளுக்கு வளையல் கொடுத்து உதவுங்கள்.

ஆடி வெள்ளியின் மகிமைகள் என்னென்ன...? எவ்வாறு வழிபட வேண்டும்..?

இவ்வாறு செய்வதால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். அதேபோல் ஆடியின் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எலுமிச்சை விளக்கு போட்டால் திருமணம் தடங்கலாக இருக்கும் பெண்களுக்கும் நல்லது என்கின்றனர். எனவே இன்றிலிருந்தே அதைத் துவங்குங்கள்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading