முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருமணத் தடையை ஏற்படுத்தும் தோஷங்களும் அதன் பரிகாரங்களும்!

திருமணத் தடையை ஏற்படுத்தும் தோஷங்களும் அதன் பரிகாரங்களும்!

திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்கள்

திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்கள்

திருமண தடைக்கு காரணமாக இருக்கும் சில தோஷங்கள் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, திருமண தோஷத்திற்கான கிரக அமைப்பு எப்படி இருக்கும். அதனால் திருமணம் நடைபெறுவதில் என்ன பிரச்னை ஆகும் என்பதைப் பார்ப்போம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவரின் முழு வாழ்க்கையிலும் ஜோதிடம் முக்கியப்பங்கு வகுக்கிறது. பிறப்பு, திருமணம், தொழில், இறப்பு என அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே கணிக்க உதவுகிறது. ஒருவரின் ஜனன கால ஜாதக அமைப்பு தான் அவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.

அதேபோல, ஒருவருக்கு அமையக்கூடிய துணை, திருமணம் அவரின் ஜாதக அமைப்பை பொருத்தே அமைகிறது. ஒருவரின் ஜாதக கிரக நிலைகளை பொருத்து தான் அந்த நபரின் திருமணம் தாமதமாக நடைபெறுமா அல்லது விரைவில் நடைபெறுமா என்பதை கணிக்க முடியும். அந்த வகையில், திருமண தாமதத்தை ஏற்படுத்தும் கிரக தோஷங்களும், அதன் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் :

ஜனன கால ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமைந்து இருப்பதை தான் செவ்வாய் தோஷம் என கூறுகின்றனர். இருப்பினும் செவ்வாய் தோஷம் பல்வேறு விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஆகலாம்.

ராகு - கேது தோஷம் :

ஜாதகத்தில் லக்னம் 2, 7, 8 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி, ராகு - கேது இருவரும் அவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டு கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். எனவே தான் திருமணத்தடை ஏற்படுகிறது.

மாங்கல்ய தோஷம் :

இந்த தோஷம் பெரும்பாலும் பெண் ஜாதகத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 ஆம் இடத்தில் அசுப கிரகங்களான சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் அமைந்து இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.

சூரிய தோஷம் :

ஒருவரின் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருப்பின் சூரிய தோஷமாகும். சூரிய தோஷ அமைப்பு கொண்ட ஜாதகங்களை, அதே போன்ற அமைப்பு கொண்ட ஜாதகருடன் சேர்ப்பதால் அந்த தோஷம் நிவர்த்தியாகிறது.

Also Read | இன்று காரடையான் நோன்பு... சுமங்கலி பெண்கள் செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

பரிகாரம் :

ஜாதகத்தில் உள்ள குறையை சரிசெய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடை தான் பரிகாரம். திருமண தடை நீங்க எளிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்:

> சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் , ஸ்ரீ காளகஸ்தி ஆலயம் சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.

> சூரியன், சனி சேர்க்கை இருந்தால், சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருமணத் தடை அகலும்.

> சுக்ரன்,கேது சேர்க்கை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ர நாமத்தை குங்கும அர்ச்சனையுடன் சொல்லி வந்தால், மனதிற்கினிய வரன் அமையும்.

> செவ்வாய், கேதுவால் திருமணத் தடை இருப்பவர்கள், அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்ர ஒரையில் வழிபட திருமணம் கைகூடும்.

> சனி, ராகு-கேது சம்பந்தத்தால் திருமணம் தடைபட்டால், ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும். அதே போல, செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

First published:

Tags: Astrology, Marriage, Marriage Problems