ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...

கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...

கேது

கேது

ketu Palan 2022 | கேதுவின்  நடமாட்டம் இந்த 7 ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஜோதிடத்தில் கிரக ராசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் தொகுப்பை மாற்றுவது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு நல்லது நடந்தால்.. சிலருக்கு தீமை நடக்கும். கேது, துலாம் ராசிக்குள் நுழைவதால் அடுத்து என்ன நடக்கும்? யார் பாதிக்கப்படுவார்கள்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் 9 கிரகங்கள். இதில் ராகு-கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. எந்த ஒருவரின் ஜாதகத்திலும் ராகு-கேது அசுப நிலையில் இருந்தால் பல பிரச்சனைகள் வரலாம். ஏப்ரல் 12ல் கேது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் கேதுவின்  நடமாட்டம் இந்த 7 ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

மேஷம்:

கேதுவின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். இந்த நேரத்தில் மற்றவர்களின் பங்கேற்புடன் வியாபாரம் செய்தால் பிரச்சனைகள் வரக்கூடும். சரும பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். உங்கள் பொருளாதார நிலை மேலும் மோசமடையும். கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க... ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கு மனநலப் பிரச்னைகள் வரலாம். பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் வாகனம் ஓட்டும் போது சாலையில் நடந்து செல்லும்போது கவனமாக இருங்கள்.

சிம்மம்: 

இந்த ராசியினருக்கு குடும்பத்தில் சந்ததி வாய்ப்பு அதிகம். மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் எந்த முதலீடும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். எனவே கவனமாக இருங்கள்.

மேலும் படிக்க... ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

துலாம்:

கேது மாற்றம் துலாம் ராசியினருக்கு பேரழிவை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கவலைகள் இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் புதிய காரியங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இடையூறுகள் மற்றும் நிதியில் இடையூறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

இந்த ராசியினருக்கு கேது மாற்றத்தால் முயற்சி பலனளிக்காமல் அல்லது தாமதமாகலாம். மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவுகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

தனுசு:

இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாமல் பயணம் செய்ய நேரிடும். அதனால் பணம் அதிகமாக செலவாகும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க... ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் வேலையில் எளிதில் வெற்றி பெற மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கென எங்கும் ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அத்ற்கு அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில் தோல் நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

First published:

Tags: Rahu Ketu Peyarchi