ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை: பம்பையில் நீராட அனுமதி உட்பட பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலை: பம்பையில் நீராட அனுமதி உட்பட பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலை

சபரிமலை

சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் செல்லும் பாரம்பரிய வன பாதை நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பாதை வழியாக மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு பம்பை நதியில் பக்தர்கள்  நீராட அனுமதி உட்பட பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இதற்காக  "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால்  நடை பந்தலிலே பலமணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு இரவு தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக தேவசம் போர்டின் தங்கும் விடுதிகளில் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது.

  பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் செல்லும் பாரம்பரிய வன பாதை நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பாதை வழியாக மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த பாதையில் நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அவசர சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. கேரளா முதல்வர் மற்றும் தேவசம் அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து  தளர்வுகளுக்கு  கேரள அரசு அனுமதி வழங்கியது.

  இதையும் படிங்க: திருப்பதி செல்வோருக்கு தித்திப்பான செய்தி.. பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு

  டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பிறகு டிசம்பர்  30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Kerala, Sabarimala