முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்!

இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்!

இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கும்.

இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கும்.

Lucky statue For Money and career : என்னடா எவ்வளவு சம்பாதிச்சாலும் கையில் காசு நிக்க மாட்டிங்குது என வருத்தப்படுபவரா நீங்க?. இதற்கு வாஸ்து பிரச்சனையும் காரணமாக இருக்கலாம். வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, சில சிலைகள் மிகவும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகின்றன. அவற்றை வீட்டில் வைப்பதன் மூலம், வருவாய் மற்றும் தொழில் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Lucky statues astrology | நமக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும், கிரகங்கள் முக்கியப்பங்கு வகுக்கின்றனர். அதே போல, நம்மை சுற்றி நிகழும் அசுப காரியங்களுக்கும் நாம் செய்யும் சிறிய தவறுகள் தான் காரணம் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆமாம், நாம் வாஸ்துவில் செய்யும் சிறிய தவறு நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வாஸ்துப்படி, சில சிலைகளை வீட்டில வைத்தால், வீட்டில உள்ள பணக்கஷ்டம் நீங்கி வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்படி, நல்ல பண்களை கொடுக்கும் சிலைகள் பற்றி காணலாம்.

​யானை சிலை :

பழங்காலத்திலிருந்தே யானைகள் செல்வம் மற்றும் செழுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது அன்னை கஜலட்சுமியின் சவாரி என்பதால், யானை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் யானை சிலையை வைத்தால், உங்கள் வீட்டிற்கு அன்னை லட்சுமி மகிழ்ச்சியுடன் வருகை தருவாள்.

யானை சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசையை பார்ப்பது போல வைக்கவும். வெள்ளி யானை சிலையை படுக்கையறையில் வைத்திருப்பது ராகுவின் அசுப பலன்களை முடிவுக்குக் கொண்டுவரும். உங்களால் சிலையை வைக்க முடியாவிட்டால், பொருத்தமான இடத்தில் ஒரு படத்தையும் மாட்டி வைக்கலாம்.

​அன்னப்பறவை சிலை (Swans Bird)

அன்னப்பறவை அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. உங்கள் படுக்கை அறையில் அன்னப்பறவையின் ஜோடி சிலையை வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். அதுமட்டும் இல்ல, கணவன் - மனைவிக்கு இடையில் நெருக்கம் மற்றும் அன்பு அதிகரிக்கும்.

Also Read | இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும், வளமும் அதிகரிக்கும்!

​ஆமை சிலை :

வீட்டில் ஆமை சிலை இருப்பது மிகவும் மங்களகரமானது. புராண நம்பிக்கைபடி, ஆமை விஷ்ணுவின் வடிவமாக கருதப்படுகிறது. அதனால் மக்கள் அதை தங்கள் வீட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். உயிருள்ள ஆமைகளை வளர்க்க முடியாது, எனவே வீட்டில் வடக்கு திசையில் ஆமை சிலையை வைக்கலாம். இதனால், பணவரவு அதிகரிக்கும் மற்றும் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழங்கால நம்பிக்கையின்படி, ஆமையின் சில பண்புகள் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் திறனை அதிகரிக்கும்.

​கிளி சிலை :

வாஸ்துபடி, கிளி அன்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. அது வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் அறையில் கிளியின் சிலை அல்லது படத்தை வைத்தால் அவர்களின் கவனம் படிப்பை நோக்கி ஈர்க்கப்படும். ஃபெங் சுய் படி, கிளி - பூமி, நெருப்பு, நீர், மரம் மற்றும் உலோகத்தை குறிக்கிறது. வீட்டில் கிளி சிலையை வைப்பதால், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அதிகாரிக்கும்.

​மீன் சிலை :

தற்போதைய காலகட்டத்தில் மீன் இல்லாத வீட்டையே காண முடியாது. ஏனென்றால், அனைவரின் வீடுகளிலும் வண்ணமயமான மீன் தொட்டிகள் காணப்படுகிறது. வாஸ்து மற்றும் ஃபெங் சுய் படி, வீட்டில் மீன் வளர்ப்பது அல்லது சிலை வைப்பது இரண்டும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

வீட்டில் மீன் வளர்க்க முடியாவிட்டால், பித்தளை அல்லது வெள்ளி மீன் சிலைகளை வாங்கி வைக்கலாம். மீன் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

நந்தி அல்லது பசு சிலை :

பசுவுக்கு சேவை செய்வது இந்து மதத்தில் கடமையாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. இதனால் தான் கிராமத்தில் இருப்பவர்கள், எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் பசு வளர்க்கிறார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் இதற்கு சாத்தியமில்லை. எனவே, பசு அல்லது நந்தி சிலைகளை வீட்டில் வைக்கலாம். இது பித்தளை அல்லது வெள்ளைக் கல்லால் செய்யப்பட்டதாக இருக்கலாம். இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும், அவர்களின் மனம் படிப்பில் ஈடுபடும்.

​ஒட்டகச் சிலை :

வாஸ்து மற்றும் ஃபெங் சுய் படி, ஒட்டகம் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் ஒட்டகச் சிலை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு ஒட்டகச் சிலையை டிராயிங் அல்லது வரவேற்பறையிலோ வைக்கலாம். வடமேற்கு திசையில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைச் செய்வது உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைக் கொடுக்கும்.

​குபேரன் சிலை :

மகிழ்ச்சியான மனிதன் என்றும் அழைக்கப்படும் சிரிக்கும் புத்தர் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளம். குபேரன் சிலை மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் விரும்பப்படும் கலைப்பொருட்களில் ஒன்றாகும். மேலும், இது நிதிச் செழுமையை ஈர்க்கும் செல்வ காந்தமாக பார்க்கப்படுகிறது. உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சிரிக்கும் புத்தர் இருப்பது உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்.

​வௌவால் சிலை :

வெளவால்கள் பெரும்பாலும் ஹாலோவீன் மற்றும் பயமுறுத்தும் படங்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், ஃபெங் சுய் படி, அவை செழிப்பின் சின்னமாக கூறப்படுகிறது. பெரும்பாலும், அவை நிதிச் சிக்கல்களை எதிர்த்துப் போராடப் பயன்படுகின்றன. "செல்வத்தை" ஊக்குவிக்க உங்கள் வீடு அல்லது வணிகத்தின் தென்கிழக்கு பகுதியில் அவற்றை வைக்கலாம். அப்படி வைப்பதன் மூலம் உங்களின் பண பற்றாக்குறை தீர்ந்து செலவை செழிப்பு அதிகரிக்கும்.

First published:

Tags: Astrology, Vastu, Vastu tips