• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எங்கெல்லாம் ஏற்றினால் நல்லது?

கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எங்கெல்லாம் ஏற்றினால் நல்லது?

மாதிரி படம்

மாதிரி படம்

ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, மாலையில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். வாங்க அதனை பற்றி தெரிந்துக் கொள்ளமாம்...

  • Share this:
    தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

    கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கு தீபத் திருநாளையொட்டி அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வழிபடும் முறைகளும் அதன் பலன்களும்

    எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்

    அதேவேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் ஒரு விளக்கும், நடையில் இரண்டு விளக்கும், பின்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4, மாட குழியில் இரண்டு, நிலைப்படிக்கு 2, சாமி படத்துக்கு கீழே இரண்டு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இடத்தில் - 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.

    27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள். முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றும் நேரம் கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.

    வாழை இலை

    தீபம் வைக்கும்போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

    மேலும் படிக்க...திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: