ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கார்த்திகை மாத பிரதோஷம்.. சிவனை வணங்கினால் பாவங்கள் நீங்கும்...

கார்த்திகை மாத பிரதோஷம்.. சிவனை வணங்கினால் பாவங்கள் நீங்கும்...

சிவபெருமான்

சிவபெருமான்

Karthigai pradhosham | மாலை 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். அந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கினால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷம் சிவபெருமானுக்கு உகந்த தினம். இந்தநாளில் வரும் பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையதாகும். அன்று மாலை சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானைக் கண்டு வணங்கி அவரின் நல்லருளைப் பெறுவதன் மூலம் வாழ்வில் நம் கஷ்டங்களை எளிதில் வெல்லலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் வருகின்ற திங்கட்கிழமை கார்த்திகை பிரதோஷம் வருகின்றது.

    அப்படி திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் ஆகும். சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் சோமவார பிரதோஷ விரதம் தரும் என்பது ஐதீகம்.

    பிரதோஷ வழிபாடு உருவானது குறித்துப் பல்வேறு சம்பவங்களில் முக்கியமானது இறைவன் விஷம் உண்ட நிகழ்வு. நன்மைகளையும் இன்பங்களையும் வேண்டிப் பாற்கடலைக் தேவர்கள் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்கள் அலறி ஓடினார்கள். அப்போது ஈசன் வெளிப்பட்டு அந்த ஆலகாலத்தை உண்டார்.

    Also see... சபரிமலையில் குவியும் பக்தர்கள்... 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்..!

    அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

    மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே நிறுத்தி காத்த காலவேளையே பிரதோஷவேளை. வளர்பிறை பிரதோஷம் , தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.

    Also see... கார்த்திகை மாதம் 2022 - விசேஷங்கள், விழாக்கள் மற்றும் விரத நாட்கள்

    சிவனை வழிபடும் முறை

    முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அருகம்புல் மாலையாலும் வில்வ இலைகளாலும் நந்தி தேவரை அலங்கரித்து, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அரிசி, வெல்லம் கலந்த காப்பரிசியை நந்தி தேவருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan