தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மகா தீபம் ஏற்றப்படும் அடுத்த நாளில் பெளர்ணமி கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது.
கார்த்திகை மாத பெளர்ணமி நாளான இன்று விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பெளர்ணமி அன்று அம்மையையும் அப்பனையும் நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.
கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முழு நிலவு நாள் கார்த்திகை பெளர்ணமி. இதை திரிபுராரி பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இன்று நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பதால், இன்று தானம் வழங்குவதற்கான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
Also see... Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?
மேலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்த நாளை திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலையில் மகா தீபமாக ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.
பலன்கள்
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் . இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.
மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். இதனால் நாம் செய்த பாவங்கள அனைதும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன.
Also see... கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
அந்த வகையில் இன்று புதன்கிழமை. புதனில் வரும் பௌர்ணமி நாளில் புதன் திசை நடப்பவர்கள், புதன் பகவான் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். மேலும் மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் சிறந்த அறிவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படவும் துர்க்கை அம்மனுக்கு இந்த தினத்தில் பச்சை நிற வஸ்திரம் சாற்றி முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய சகல யோகங்களும் வாழ்வில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam