Home /News /spiritual /

ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் இனி 19 ஆண்டுகளுக்கு பிறகுதான் வருமாம்... ஏன் தெரியுமா?

ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் இனி 19 ஆண்டுகளுக்கு பிறகுதான் வருமாம்... ஏன் தெரியுமா?

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசலை கடந்தார் நம்பெருமாள். இந்த கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி 19 ஆண்டுகள் கழித்துதான் திரும்பவும் வருமாம்.

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசலை கடந்தார் நம்பெருமாள். இந்த கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி 19 ஆண்டுகள் கழித்துதான் திரும்பவும் வருமாம்.

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசலை கடந்தார் நம்பெருமாள். இந்த கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி 19 ஆண்டுகள் கழித்துதான் திரும்பவும் வருமாம்.

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை வரும் வைகுண்ட ஏகாதசி அன்று  பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுப்பார். பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே வந்துவிட்டது. வழக்கமாக மார்கழியில்தான் வரும். அதாவது  மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள். அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிறகோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும்.

    ஏகாதசி மாறி வந்ததற்கான காரணம் 

    ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. மற்ற கோயில்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி 2022ல்தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்கிறார்கள். இதில் எந்த ஏகாதசியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் இந்த வித்தியாசம் இந்த ஆண்டு மட்டும் வருகிறது? காரணம் என்ன?  என்பதற்கு ஆச்சாரியர்கள் கூறும் பதில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். மேலும் அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம்.

    ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிற கோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. காரணம் ஆண்டுதோறும் ஶ்ரீரங்கத்தில் தை மாதம் முதல் நாளில் பூபதித் திருநன்னாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதுவும் காப்புக்கட்டுதல் வைபவமும் அன்றைய நாளில் வரும். அத்யயன உற்சவத்துக்கும் காப்புகட்டுவார்கள்.

    மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி: மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு...

    அதனால் ஒரே நேரத்தில் இரண்டு காப்பு கட்டும் வைபவங்களைக் கடைப்பிடிக்க முடியாது. அதேவேளையில் பூபதித் திருநன்னாளையும் தை முதல் தேதியிலிருந்து மாற்ற முடியாது என்பதால் அத்யயன உற்சவத்தை மாற்றியிருக்கிறார்கள். இந்த முறை ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்றும் வைகுண்ட ஏகாதசித் திருநாளை 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டாடுகிற வழக்கமும் உண்டு.

    மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா...  இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது...

    இந்த வழக்கம் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் ஆச்சாரிய பெருமக்கள் கூறுகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Srirangam, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி