ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இன்று கார்த்திகை மாத பிரதோஷம்... சிவனை வணங்கினால் கஷ்டங்கள் தீரும்...

இன்று கார்த்திகை மாத பிரதோஷம்... சிவனை வணங்கினால் கஷ்டங்கள் தீரும்...

சிவன்

சிவன்

பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்றவுடன் முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்று கார்த்திகை பிரதோஷம். சிவபெருமானுக்கு உகந்த தினம். இந்தநாளில் வரும் பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இன்று மாலை சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானைக் கண்டு வணங்கி அவரின் நல்லருளைப் பெறுவதன் மூலம் வாழ்வில் நம் கஷ்டங்களை எளிதில் வெல்லலாம் என்பது நம்பிக்கை.

தோஷங்கள் என்பவை நம் முன்வினைப் பயன்களால் நமக்கு நேர்ந்தவை. அவற்றை மாற்ற நமக்குக் கிடைக்கும் பிரசாதமே பிரதோஷம். பிரதோஷ வழிபாடு உருவானது குறித்துப் பல்வேறு சம்பவங்களில் முக்கியமானது இறைவன் விஷம் உண்ட நிகழ்வு. நன்மைகளையும் இன்பங்களையும் வேண்டிப் பாற்கடலைக் தேவர்கள் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்கள் அலறி ஓடினார்கள். அப்போது ஈசன் வெளிப்பட்டு அந்த ஆலகாலத்தை உண்டார்.

அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே நிறுத்தி காத்த காலவேளையே பிரதோஷவேளை. வளர்பிறை பிரதோஷம் , தேய்பிறை பிரதோஷமென மாத இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.

சிவனை வழிபடும் முறை

முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அருகம்புல் மாலையாலும் வில்வ இலைகளாலும் நந்தி தேவரை அலங்கரித்து, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அரிசி, வெல்லம் கலந்த காப்பரிசியை நந்தி தேவருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

மேலும் படிக்க... சுபமு கூர்த்த நாட்கள் 2021-2022: திருமணம் , நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம்

First published:

Tags: Sivan