ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதியில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி..!

திருப்பதியில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி..!

திருப்பதி கருட சேவை

திருப்பதி கருட சேவை

Tirupati | பௌர்ணமியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்து அருள் பாலித்தார். நான்கு மாடவீதிகளில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர் |

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati NMA, India

பௌர்ணமி தினமான நேற்று மாதாந்திர பௌர்ணமி கருட சேவை திருப்பதி மலையில் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி தினமான நேற்று கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெற்றது.

கருட வாகன சேவையை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்துருளினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமர்ப்பணங்களுக்கு பின் கோவில் மாடவீதியில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருட வாகன சேவை நடைபெற்றது.

கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

Also see... தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி ஏழுமலையானின் கருட வாகன சேவையை கண்டு கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபட்டனர்.

First published:

Tags: Garuda Seva, Garuda Sevai, Tirumala Tirupati, Tirupati